PDFPrint

உடல் ஆரோக்கியத்திற்கான அரோமா தெரபி & அக்குபஞ்சர்

டாக்டர் சி.ஏ.ரவி. மாற்று மருத்துவத்தில் சாதிக்க துடிக்கும் இளைய மருத்துவர்களுக்கு ஓர் முன்னோடி.
Array
100.00 ₨
Description

AUTHOR NAME :

PAGES : 128

டாக்டர் சி.ஏ.ரவி. மாற்று மருத்துவத்தில் சாதிக்க துடிக்கும் இளைய மருத்துவர்களுக்கு ஓர் முன்னோடி. கடந்த 29 ஆண்டுகளாக மாற்று மருத்துவத் துறையில் சேவைகள் செய்து வருவதோடு, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். அவற்றுள் முத்தாய்ப்பாக, கடந்த 1995ஆம் ஆண்டு தனது எய்ட்ஸ் குறித்த ஆராய்ச்சிக்காக தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அனைத்து இந்திய சித்த மருத்துவர்களால் சித்த மருத்துவ திலகம் என்ற பெருமைமிகு விருதினையும் பெற்றுள்ளார். மாற்று மருத்துவத்தில் ஏற்கனவே உள்ள பழைய முறைகளை பின்பற்றுவதோடு மட்டுமின்றி, புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். ’ பூ பஞ்சர்’ என்ற புதிய மருத்துவ முறையை அறிமுகம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளார். சிறந்த மருத்துவராக மட்டுமின்றி மருத்துவ துறையில் ஓர் தொழில்முனைவோராக பல ஆண்டுகளாக வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட வெளிநாடுகளிலும் மருத்துவ பேராசிரியராக சேவைகள் செய்து வருகிறார். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். வடலூரில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டில் திருமூலர் விருதையும், மதுரையில் ‘மூலிகைகளின் தந்தை’ என்ற விருதையும், கமலமுனி என்ற உயரிய விருதையும் பெற்றுள்ளார். தூர்தர்ஷன், சன் டிவி, ராஜ் டிவி, ஜெயாடிவி உள்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் அக்குபஞ்சர் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார். எழுத்துத் துறையிலும் கால்பதித்து, ஃபேமிலி ஹெல்த் ஹெல்த் பாயிண்ட் மனோசக்தி மருந்து உலகம் ஹெல்த் டாக்டர் பெண்மணி உணவு உலகம் ஆயுர்வேதம் டுடே உள்பட பல்வேறு பத்திரிகைகளில் மருத்துவம் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதி வருகிறார்

Reviews

There are yet no reviews for this product.